ADDED : ஆக 30, 2026 05:52 AM
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
முத்தமிழ் சங்கம், மனித உரிமை ஒருங்கிணைப்பு குழு மற்றும் யங் மைன்ட்ஸ்
இன்டர்நேஷனல் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா, பொறியாளர் மூர்த்தி
தலைமையில் துவங்கியது. பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், அனைத்து
வணிகர் சங்கத் தலைவர் நாகமையன் முன்னிலை வகித்தனர். தியாகி ஈஸ்வரன்
மண்டபத்தில் அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை, எழுத்தாளர் உமையவன்
துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட முன்னணி
பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மரபு
விதைகள் மற்றும் மூலிகை தாவரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கிராமப்புறங்களில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பவானிசாகரில்
முதன்முறையாக புத்தக கண்காட்சி இரண்டு நாள் நடத்தப்படுகிறது.
புத்தக திருவிழாவில் மாணவ மாணவியர், ஆசிரியர், பெற்றோர், மக்கள்
உள்பட அனைத்து தரப்பினரும்
பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
