/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
/
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
ADDED : ஜூலை 03, 2025 01:41 AM
ஈரோடு, ஈரோட்டில், தண்ணீர் தொட்டியில் மூழ்கி, 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ்--சபிதா தம்பதியினர். இவர்களது மகன் ஹரீஷ், 2, கருங்கல்பாளையம் கக்கன் நகரில் வேலை பார்த்து வருகின்றனர். முகேஷ் கட்டட வேலையும், சபிதா கார்மென்ட்சிலும் பணிபுரிகின்றனர்.
சபிதா கடந்த, 30ம் தேதி மாலை ஹரிஷை வைராபாளையத்தில் கட்டட வேலை செய்யும் வீட்டில் விட்டு சென்றார். வீட்டின் வளாகத்தில் விளையாடிய ஹரிஷ், எதிர்பாரதவிதமாக அங்குள்ள ஆறு அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கினான். இதை பார்த்த முகேஷ், சபிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன், ஹரிஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.