/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
/
பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
ADDED : செப் 30, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறையில் திம்மராய பெருமாள் கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
இதை தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் செய்து காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. பின்னர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அக்., 2ம் தேதி வரை தினசரி கருட வாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனங்களில் உற்சவர் வீதி உலா நடக்கும். விழா முக்கிய நிகழ்வாக விஜயதசமி நாளில், திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது.