/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
ADDED : அக் 05, 2024 07:15 AM
ஈரோடு: ஈரோட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கிராம சாந்தியுடன் இன்று தொடங்குகிறது.
நாளை அதிகாலை கோவிலில் கொடியேற்றம் செய்யப்பட்டு, இரவில் அன்னப்பறவை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்வான தேரோட்டம், 2ம் தேதி காலை நடைபெறவுள்ளது. 13ம் தேதி இரவு பரிவேட்டை, 14ம் தேதி தெப்போற்சவம், 15ம் தேதி இரவு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுபடி நடக்கிறது.
விழா நடக்கும் நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில் மின் அலங்காரத்துடன் கூடிய வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அரங்கநாதர் மற்றம் கோவில் வளாகத்தை பூக்களால் அலங்கரிப்பதற்காக, மாலை கட்டும் பணி நேற்று மும்முரமாக நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க, 10 ஆயிரம் லட்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.