பள்ளிகளில் காலை உணவு திட்டம் தனி அலுவலர் கண்காணிக்க ஏற்பாடு
பள்ளிகளில் காலை உணவு திட்டம் தனி அலுவலர் கண்காணிக்க ஏற்பாடு
ADDED : அக் 01, 2026 02:29 AM
ஈரோடு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி-களில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், அத்திட்டத்தை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து கடந்த, 22ம் தேதி முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை தனி அலுவலர் மூலம் கண்காணித்து வருவதாக அதிகாரி
கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காலை உணவு திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை, 74 பள்ளிகளை சேர்ந்த, 9,558 மாணவ, மாணவியர் பயன்பெற்று வந்தனர். திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 25 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட்டது. 99 பள்-ளி
களில், 17,452 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கான உணவு இரண்டு இடங்களில் தயார் செய்து, காலை 7:30 மணிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு செல்-லப்படுகிறது. இப்பணிகளை, தினசரி ஒரு அலுவலர் கண்கா-ணித்து புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்-டுள்ளது. இதேபோல் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிய-ரிடம் உணவு குறித்து கருத்து கேட்டு பதிவு
செய்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.
