தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு முகாம்

மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு முகாம்

மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு முகாம்


ADDED : அக் 01, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், 3, 4ம் மண்டலத்தில் பணியாற்றும் தற்-காலிக துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்-தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். ஆணையர் அர்பித்-ஜெயின் முன்னிலை வகித்தார். முகாமில், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்-பித்தல், நலத்திட்ட உதவி

கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுவது போன்ற சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தற்கா-லிக துாய்மை பணியாளர்களிடமிருந்து அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கை தொடர்பாக, 298 மனுக்கள் பெறப்பட்டன.

இதேபோல், தாட்கோ சார்பில் இரு தற்காலிக துாய்மை பணி-யாளர் சங்கங்களுக்கு, 13.36 லட்சம் மதிப்பிலான சிறு கடன் பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை, மாநகராட்சி சார்பில் 15 பேருக்கு பணி பாதுகாப்பு உபக-ரணம், சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கு பரிசு, பாராட்டு சான்-றிதழ் வழங்கப்பட்டன.

முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: துாய்மை பணியா-ளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி உத-வித்தொகை, மருத்துவ உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி, சுய-தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு வீட்-டு

மனை பட்டா, குடியிருப்பு வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்-பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட தாட்கோ மேலாளர் முருகவேல், மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உட்பட பலர் கலந்து

கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us