/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 30, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு வளாகத்தில் இருந்து, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மார்பக புற்றுநோய் அறிகுறியாக, மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்கு பின், மாதத்துக்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்வது சிறந்தது. மார்பகங்களில் கட்டிகள், வீக்கம், வலி, அசாதாரண மாற்றங்கள் இருந்தால் மார்பக சுய பரிசோதனை, மருத்துவர் அல்லது மருத்துவ பயிற்சியாளர்களிடம் பரிசோதித்து ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறலாம்.
எக்ஸ்ரே, மேமோகிராம் பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் கண்டறிந்து தற்காத்து கொள்ளலாம் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பனை மர விதைகள் நடும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். இணை இயக்குனர் (நலப்பணிகள்) சாந்தகுமார், உறைவிட மருத்துவர் சசிரேகா, அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிகுமார், டாக்டர்கள் வெங்கடேஷ், ராணி உட்பட பலர்
பங்கேற்றனர்.

