ADDED : மே 17, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கோபி அருகே சிறுவலுார், தவடம்பாளையம், திருமலைநாயக்கர் வீதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக, கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் சென்றது.
போலீசார் சோதனையில், திருப்பூர் மாவட்டம் பவானி நகர் குறுக்கு வீதி பழனிசாமி, 52, சாராயம் காய்ச்சியது தெரிந்தது. அவரை கைது செய்து, 5 லிட்டர் சாராயம், 50 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம், ஈரோடு எஸ்.பி., சுஜாதா மூலம் பரிந்துரைத்தார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி பழனிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.