ADDED : நவ 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா மொடச்சூர் அருகே கே.ஏ.எஸ்., நகரை சேர்ந்தவர் ஜெயா, 45; பட்டாவில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவரிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, கலிங்கியம் 'ஆ' கிராமம் வி.ஏ.ஓ., சசிக்குமார், கோபி தாலுகா மண்டல துணை தாசில்தார் மணிமேகலையை, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு செய்து செய்தனர்.
இதில் வி.ஏ.ஓ., சசிக்குமார் மாவட்ட சிறையிலும், மணிமேகலை திருப்பூர் பெண்கள் சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர். வி.ஏ.ஓ., சசிக்குமாரை, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

