/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணாக நடித்து ஓட்டம் பிடித்த புரோக்கரின் மனைவி: இரண்டாவது திருமணம் செய்த வாலிபருக்கு அதிர்ச்சி
/
பெண்ணாக நடித்து ஓட்டம் பிடித்த புரோக்கரின் மனைவி: இரண்டாவது திருமணம் செய்த வாலிபருக்கு அதிர்ச்சி
பெண்ணாக நடித்து ஓட்டம் பிடித்த புரோக்கரின் மனைவி: இரண்டாவது திருமணம் செய்த வாலிபருக்கு அதிர்ச்சி
பெண்ணாக நடித்து ஓட்டம் பிடித்த புரோக்கரின் மனைவி: இரண்டாவது திருமணம் செய்த வாலிபருக்கு அதிர்ச்சி
ADDED : மே 29, 2024 07:17 AM
தாராபுரம் : தாராபுரம் அருகே, முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளைஞர் இரண்டாவது திருமணம் செய்த போது, புரோக்கரின் மனைவியே மணப்பெண்ணாக நடித்து, பணத்துடன் ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாராபுரத்தை அடுத்த பாப்பனுாத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28; காற்றாலை நிறுவன மெக்கானிக். திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தார். கேரளாவை சேர்ந்த ஒரு புரோக்கர் அறிமுகமானார். கமிஷனாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ஒரு பெண்ணை பார்க்க அழைத்து சென்றார்.
அங்கு ஒரு கோவிலில் வைத்து பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்த ராதாகிருஷ்ணன், திருமூர்த்தி மலை கோவிலில் பெண்ணை திருமணம் செய்தார். மாதவிடாயை காரணமாக சொல்லி, முதலிரவை தள்ளிப்போட்டார் மணப்பெண். மறுநாள், மறு வீடு நிகழ்ச்சிக்காக கேரளா செல்லும்போது, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றுகூறி, பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.மருத்துவமனைக்கு வெளியே ராதாகிருஷ்ணனை நிற்க வைத்துவிட்டு, தாயாருடன் உள்ளே சென்ற பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை. உள்ளே சென்று பார்த்த போது, பெண் மற்றும் அவரது உறவினர்கள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து ராதாகிருஷ்ணன் விசாரித்தபோது தான், புரோக்கரின் மனைவியே மணப்பெண்ணாக நடித்தது தெரிய வந்தது. ஒரு லட்சம் ரூபாய் கமிஷன், தங்கத் தாலி மற்றும் தோடு மூக்குத்தியுடன், ஓட்டம் பிடித்ததும் தெரிந்தது. இதேபோல் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சம்பவம் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் உரிய விசாரணை நடத்தி, கல்யாண புரோக்கராக நடித்து ஏமாற்றும் கும்பலை கைது செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.