/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளிக்காக பி.எஸ்.என்.எல்., சலுகை அறிவிப்பு
/
தீபாவளிக்காக பி.எஸ்.என்.எல்., சலுகை அறிவிப்பு
ADDED : அக் 16, 2025 01:31 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலக செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:சிறப்பு தீபாவளி பிரிபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டமாக, 1 ரூபாய் செலுத்தி வரம்பில்லா அழைப்புகள், தினமும், 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்.,கள், என, 30 நாட்கள் பயன் பெறலாம். அக்., 15 முதல் நவ., 15 வரை மட்டும் இச்சலுகை உண்டு.
புதிய பி.எஸ்.என்.எல்., பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள், மொபைல் நம்பர் போர்டபிளிட்டி மூலம் பி.எஸ்.என்.எல்.,க்கு மாறும் வாடிக்கையாளர்களும் இச்சலுகை பெறலாம். பி.எஸ்.என்.எல்.,ன் '4ஜி' சேவையுடன் இணைந்து பண்டிகை கால பயனை பெறலாம். விரைவில், '5ஜி'க்கு பி.எஸ்.என்.எல்., தயாராகி வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.