ADDED : மே 02, 2024 12:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியவலசு டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் சதீஷ், 36. இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று மதியம், 1:30 மணிக்கு ஈரோடு அடுத்த சாவடிப்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு தனது டாடா இண்டிகா காரில் சென்றார்.
சாவடிப்பாளையம் அருகே சென்றபோது, அவரது காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளியேறி தீப்பிடித்தது. இதை பார்த்த சதீஷ், காரை ஓரமாக நிறுத்தினார். அனைவரும் காரில் இருந்து இறங்கினர். மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சிறிது நேரத்தில் தீயணைப்பு துறையினர் வந்து, காரில் பற்றிய தீயை அணைத்தனர். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

