ADDED : நவ 01, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
கோபி:பவானி
அருகே தட்டார்பாளையம் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார், 29; தனியார்
பஸ் கண்டக்டர்; இவர் தனது நண்பர்களுடன், கவுந்தப்பாடி அருகே
கவுண்டன்புதுார் என்ற இடத்தில் செல்லும் பவானி ஆற்றில், அக்.,29ல்
குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சசிக்குமார்
புதை மணலில் சிக்கிக்கொண்டார்.
இதையறிந்த நண்பர்கள்,
சசிக்குமாரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரின்
உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சசிக்குமாரை மீட்டு,
சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர் பரிசோரித்தபோது,
சசிக்குமார் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது
குறித்து சசிக்குமாரின் தந்தை, முருகேசன்,51, கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
