ADDED : நவ 01, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகர் மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர்
இந்திரா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர்
ராஜேஷ்ராஜப்பா தலைமையில் இந்திரா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியை
ஏற்றனர். மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஜவகர்அலி, மாவட்ட
பொருளாளர் புனிதன், பகுதி தலைவர்கள் விஜயபாஸ்கர், கோபி, அர்ஷத்,
பாஷா, கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
