தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அசுர வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அசுர வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அசுர வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 20, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு எதிரே வசிக்கும், அருண்குமாருக்கு சொந்தமான, ஏ.எஸ்.எம்., தன்ஸ்ரீ என்ற பஸ், அந்தியூரிலிருந்து கோவை சென்று வருகிறது. நேற்று முன்தினம், அந்தியூர் அடுத்த ஊஞ்சக்காட்டை சேர்ந்த டிரைவர் தமிழ் பணியில் இருந்தார்.

இரவு, 9:00 மணிக்கு, கோவையிலிருந்து அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் வந்தது. கடைசி, 'டிரிப்' முடிந்த நிலையில், அரசு மருத்துவமனை அருகிலுள்ள, 'செட்'டில் நிறுத்த, பஸ் ஸ்டாண்டிலிருந்து உரிமையாளர் அருண்குமார் பஸ்ஸை ஓட்டி சென்றார்.

அசுர வேகத்தில் வந்த பஸ், அரசு மருத்துவமனை வளைவில் திரும்பியபோது, அங்கு நின்றிருந்த, புதுப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த சிதம்பரம், 47, என்பவர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்ற பஸ், இடது பக்கம் இருந்த பூக்கடைக்குள் பாய்ந்து, மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில், பஸ்ஸின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்தின்போது, பூக்கடைக்கு வெளியே, 10 அடி துாரத்தில் நின்றிருந்த, உரிமையாளர் அனிதா, 38; அவரது மகள் கிருபாஸ்ரீ, 16, ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து ஏற்பட்டதும், உரிமையாளர் அருண்குமார் அங்கிருந்து தப்பியோடினார். விபத்தில், பேக்கரி முன் நிறுத்தியிருந்த, 3 பைக்குகள் சேதமடைந்தன. காயமடைந்த சிதம்பரம், அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு

திரும்பினார். இந்நிலையில், பஸ் மோதியதால் பாதிக்கப்பட்டோர் அந்தியூர் போலீசில் புகாரளித்தனர். பஸ் உரிமையாளர் அருண்குமார் மீது, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us