தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலை முக்கோணவியல் நிலையம் புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை?

சென்னிமலை முக்கோணவியல் நிலையம் புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை?

சென்னிமலை முக்கோணவியல் நிலையம் புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை?


ADDED : நவ 20, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னை, பரங்கிமலையில் இருந்து, 'இந்திய முக்கோணவியல் அளவீடு' எனும் வரலாற்று சிறப்புமிக்க அறிவியல் நில அளவைப்பணி, 1802- ஏப்., 10ல் தொடங்கப்பட்டது. இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பு, மலைகளின் உயரம், அட்ச, தீர்க்க ரேகைகளை துல்லியமாக அளவிட்டு, இந்தியாவின் முழு வரைபடத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இதற்கு நாடு முழுதும், உயரமான மலை உச்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, 'தியோடோலைட்' எனும் கோண அளவீட்டு கருவிகளை நிறுவ, உறுதியான கற்களால் ஆன மேடைகள், அடையாள அளவீடு கற்கள் அமைக்கப்பட்டன. ஒரு மலை உச்சியில் இருந்து, மற்றொரு மலை உச்சியை தொடர்புபடுத்தி, முக்கோண வடிவில் கோணங்களை அளவிட்டு, நிலப்பரப்பு துல்லியமாக கணக்கிடப்பட்டது. இப்பணி மூலமாகவே, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரமும் துல்லியமாக கண்டறியப்பட்டது.

அதன்படி தென்னிந்திய அளவீட்டு பணியின்போது உயரமான குன்றாக விளங்கும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்ரமணியர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியும், ஒரு முக்கோணவியல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, இந்திய அளவீட்டு கல் நிறுவப்பட்டுள்ளது. புவியியல், நில அளவை வரலாற்றில், முக்கியத்துவம் வாய்ந்த சான்றாக விளங்கும் இந்த முக்கோணவியல் நிலையத்தை பாதுகாக்க, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தொல்லியல் துறை சார்பில் புராதன சின்னமாக அறிவித்து பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று, பெருந்துறை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர், மலை உச்சிக்கு சென்று, முக்கோணவியல் நிலையத்தை பார்வையிட்டனர்.

அளவீட்டு கல் உள்ள இடம், அதன் தற்போதைய நிலை, அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us