தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் ஸ்வெட்டர் விற்பனை விறு விறு

ஈரோட்டில் ஸ்வெட்டர் விற்பனை விறு விறு

ஈரோட்டில் ஸ்வெட்டர் விற்பனை விறு விறு


ADDED : நவ 19, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு நகரில் சில நாட்களாக, குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் மிதமான குளிர் காற்று வீசினாலும், இரவு, அதிகாலையில் அதிக குளிர் வீசுகிறது. குளிர், பனியில் இருந்து தற்காத்து கொள்ள ப.செ. பார்க், மணிக்கூண்டு, மீனாட்சி சுந்தரானார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போடப்படுள்ள சாலையோர கடைகளில் குளிர், மழைக்கால ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் குளிர் மற்றும் மழை காலத்தை முன்னிட்டு மப்லர், ஸ்வெட்டர், ஜெர்கின் என பல்வேறு ஜவுளி பொருட்களை பஞ்சாப், பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இங்கு மப்லர், 60 முதல் 300 ரூபாய், உல்லன் ஸ்வெட்டர், 550 முதல் 1,000 ரூபாய், லேடிஸ் ஸ்வெட்டர், 500 முதல் 1,000, சிறியவர்களுக்கான ஸ்வெட்டர், 450 முதல் 950 ரூபாய், ரெயின்கோட், 750 முதல் 2,000 ரூபாய், கவர் ரெயின்கோட், 500 ரூபாய்க்கு விற்கிறோம்.

போக்குவரத்து செலவு, வரி போன்ற பல்வேறு காரணங்களால், கடந்தாண்டை விட நடப்பாண்டில் அனைத்து பொருட்களும் சராசரியாக, 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் புதுப்புது டிசைன்கள் வந்துள்ளதால், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு வியாபாரம் நன்றாகவே இருந்தது. நடப்பாண்டு இப்போது தான் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us