/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொடச்சூர் வாரச்சந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்
/
மொடச்சூர் வாரச்சந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்
ADDED : அக் 20, 2024 01:16 AM
மொடச்சூர் வாரச்சந்தையில்
பருப்பு வியாபாரம் மந்தம்
கோபி, அக். 20-
மொடச்சூர் வாரச்சந்தையில், பருப்பு வியாபாரம் மந்தமாக இருந்தது.
கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயறு விற்பனை வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 160 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சைபயிர் மற்றும் பாசிப்பருப்பு, தலா, 130 ரூபாய், கடுகு, 120, சீரகம், 400, மல்லி, 120 முதல், 150 ரூபாய் வரை, கொள்ளு, 100, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு, தலா 120 ரூபாய், கருப்பு சுண்டல், 110, வெள்ளை சுண்டல், 130, மிளகு, 800, பொட்டுக்கடலை, 120, பூண்டு, 350, வரமிளகாய், 200 ரூபாய்க்கு விலைபோனது. இந்த வாரமும் வியாபாரம் மந்தமாகவே இருந்தது.
அதேசமயம் ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால்,
சுபகாரியங்கள் மற்றும் கோவில் பண்டிகை வர இருப்பதால், வரும் வாரங்களில் பருப்பு மற்றும் பயறு ரக வியாபாரம் நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.