/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பையர் - செல்லர் மீட்'டில் ரூ.54.94 கோடிக்கு ஒப்பந்தம்
/
'பையர் - செல்லர் மீட்'டில் ரூ.54.94 கோடிக்கு ஒப்பந்தம்
'பையர் - செல்லர் மீட்'டில் ரூ.54.94 கோடிக்கு ஒப்பந்தம்
'பையர் - செல்லர் மீட்'டில் ரூ.54.94 கோடிக்கு ஒப்பந்தம்
ADDED : நவ 16, 2025 01:39 AM
ஈரோடு;ஈரோட்டில் 'வாங்குவோர் - விற்போர் சந்திப்பு' இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று நடந்தது. தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் 'பே மீ டி.என்' அமைப்பு மூலமான நிகழ்வில் பல்வேறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த, 42 நிறுவனங்கள் பங்கேற்றன.
ஜவுளி, விவசாயம், உணவு உற்பத்தி, கயிறு தயாரிப்பு, தோல் பொருட்கள் போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் பங்கேற்று, இறுதி நாளில், 83 நிறுவனங்கள், 54.94 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு ஆர்டர்களை பெற்று, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.