/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அயன் பட்டாவாக்க விண்ணப்பிக்க அழைப்பு
/
அயன் பட்டாவாக்க விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 15, 2026 05:13 AM
ஈரோடு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சத்தியமங்கலம், கோபி, நம்பியூர், பவானி தாலுகாக்களில், கீழ்பவானி பாசன திட்டங்க-ளின்போது நிபந்தனையின் கீழ் வழங்கப்பட்ட பூமிகளின், நிபந்த-னையை நீக்கம் செய்து அயன் பட்டாவாக மாற்றம் செய்ய அர-சாணை வழிகாட்டுதல் நெறிமுறையுடன் விடப்பட்டுள்ளது.
இத்திட்ட நிபந்தனை பட்டாக்களை அயன் பட்டாவாக மாற்றக்-கோரும் நில உரிமையாளர்கள், நில ஒப்படை வழங்கப்பட்டதற்-கான அசல் நில ஒப்படை ஆணை, பதிவு பெற்ற ஆவணங்கள், பட்டா, சிட்டா, வில்லங்க சான்று, இணையத்தில் கோரப்படும் விபரங்களுடன், www.erode.nic.in/lbp என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக வரும், 18ல் வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகங்களில் நடக்கும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்க-ளுடன் விண்ணப்பிக்க, கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்-துள்ளார்.

