ADDED : நவ 06, 2026 05:29 AM

ஈரோடு:மத்திய
அரசு இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில்
பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி
உதவித்தொகை வழங்க, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம்
செயல்படுத்துகிறது.
நடப்பு, 2026-27 ம் ஆண்டுக்கு தேசிய கல்வி
உதவித்தொகை இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு
கல்வி நிறுவனம் பள்ளிகளில் நடப்பாண்டில், 9 ம் வகுப்பு முதல், பிளஸ் 2
வரை பயிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், https://scholarships.gov.in
என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி கட்டணம், விடுதி
கட்டணம் என, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 75,000 ரூபாயும், பிளஸ் 1,
பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக
வழங்கப்படும். 30 சதவீத மாணவியர் பயன் பெறுவர். மாணவர்களின்
விண்ணப்பம் வரும், 30க்குள்ளும், கல்வி நிறுவனங்களின் விண்ணப்பத்தை,
டிச.,15க்குள் அனுப்ப வேண்டும்.
