ADDED : நவ 06, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பவானி
போத்த நாயக்கனுார் கண்ணாடிபாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன்
பிரதீப், 23, கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணை
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
இளம்பெண் தற்போது
ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது
வயது குறித்து மருத்துவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து
சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் தரப்பட்டது. பவானி அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தனர்.
இதன் அடிப்படையில் விசாரித்த
போலீசார், பிரதீப் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ
பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
