ADDED : நவ 06, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
வாரச்சந்தை வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
ஈரோடு, திருப்பூர்,
கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன
வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சந்தைக்கு நேற்று,
800க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும்
விவசாயிகள் கொண்டு வந்தனர். வரத்து அதிகரிப்பால் கிலோ, 80 ரூபாயாக
சரிந்தது. சில நாட்களுக்கு முன் கிலோ, 160 ரூபாய்க்கு விற்ற நிலையில்,
80 ரூபாய் முதல் 100 ரூபாயாக நேற்று குறைந்து விட்டது.கர்நாடக
மாநிலத்தில் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை நடப்பதால் வரத்து
அதிகரித்துள்ளது. அங்கிருந்து தமிழகத்துக்கு வருவதால், பிற
இடங்களில் தேவை சரிந்து விலையும் குறைந்து விட்டதாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.
