/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தபால் தலை வடிவமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு
/
தபால் தலை வடிவமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:03 AM
திருப்பூர், ஐக்கிய நாடுகள் அமைப்பு அக்., மாதம் ஜ.நா.,@80 எனும் தலைப்பில், 80ம் ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. இந்த அடையாள நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஐக்கிய நாடுகள் அரசியல் பிரிவு தபால்துறையை 'UN@80' கொண்டாட்டங்களில் பங்கேற்க தேர்வு செய்துள்ளது.
இது தொடர்பாக, 2025 ஜூலை 1 முதல் ஆக., 15 வரை 'UN@80 - பன்முக கூட்டாண்மை, உலகத் தன்மையின் மூலம் எதிர்காலத்தை உருவாக்கும் இந்தியாவின் தலைமைப்பங்கு' என்ற தலைப்பில் தபால்துறையும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து தபால் தலை வடிவமைப்பு போட்டியை நடத்துகிறது.
திருப்பூர் கோட்ட தபால்துறை சார்பில், சி.பி.எஸ்.இ., மாநில கல்வித்துறை மற்றும் உயர்கல்வி குழுமங்களுடன் இணைந்து, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் போட்டி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது ஒரு தேசிய அளவிலான போட்டி என்பதால், தேர்வான வடிவமைப்புகள் தபால் தலையாக வெளியிடப்படும். மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கலைதிறமைகளை வெளிப்படுத்தலாம். தகவல் மற்றும் பங்கேற்பதற்காக www.mygov.in இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம்.