ADDED : நவ 18, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகத்தை
சேர்ந்த, 50 புத்தக மதத்தினர், 50 சமண மதத்தினர், 20 சீக்கிய
மதத்தினர் இந்தியாவில் உள்ள அவர்களின் மதங்களுக்கான புனித
தலங்களுக்கு பயணம் மேற்கொண்டவர்களில் ஒருவருக்கு தலா, 10,000
ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை
ஈரோடு கலெக்டர் அலுவலக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். தவிர,
www.bcmbcmw.tn.gov.inல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர்
நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம்,
சென்னை - 600005' என்ற முகவரிக்கு ஜன.,31க்குள் அனுப்ப வேண்டும்.
