ADDED : நவ 18, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:வைகாசி,
ஆவணி, கார்த்திகை, மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலமாக
கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபட்டால் பல
ஏகாதசி விரதங்களுக்கு இணையான புண்ணியம் கிடைக்கும். வேண்டுதல்
அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாத பிறப்பான நேற்று,
விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டுக்காக, ஈரோடு கோட்டை கஸ்துாரி
அரங்கநாதர் கோவிலில், அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் பூக்களை கையில் ஏந்தியபடி, கோவில் பிரகாரத்தை, 27 முறை சுற்றிவந்து கொடிமரத்தை வணங்கி வழிபட்டனர்.
