ADDED : நவ 29, 2024 01:07 AM
ரீடு நிறுவனம் சார்பில் பிரசாரம்
சத்தியமங்கலம், நவ. ௨௯-
ரீடு தன்னார்வ சேவை நிறுவனத்தின் சார்பில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, கையெழுத்து விழிப்புணர்வு பிரசாரம், ரீடு இயக்குனர் கருப்புசாமி தலைமையில் சத்தியமங்கலத்தில் நடந்தது. பிரசாரத்தை நகராட்சி சேர்மன் ஜானகி தொடங்கி வைத்தார். சத்தி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, விரைவு அலுவலர் விஜயலட்சுமி, ஊர் நல அலுவலர்கள் வசந்தி, கல்யாணி, சமூக ஆர்வலர்கள் ஆணைகொம்பு ஸ்ரீராம், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புனிதம் கலை மேம்பாட்டு இயக்கத்தினர் கரகாட்டம், தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து கடம்பூர், ஆசனுார், பவானிசாகர், கோபி, பெருந்துறை மற்றும் அவினாசி பகுதிகளில் வரும் டிச., 10ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரீடு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

