/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாமே?' சாலையோரத்தில் குவிக்கப்படும் கழிவால் குமுறல்

ADDED : ஆக 29, 2025 01:13 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட நசியனுார் சாலை, இடையன்காட்டு வலசு அருகில் சின்ன முத்து மெயின் வீதி உள்ளது. இப்பகுதியில் ஓட்டல்கள், மளிகை கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளன.
இங்குள்ள ராஜகணபதி கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பொது கழிப்பிடமும் உள்ளது. இதை ஒட்டி செல்லும் ராட்சத சாக்கடையை மாநகராட்சி ஊழியர்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறை துார்வாருகின்றனர். சாக்கடையை ஒட்டிய சாலையில் மலைபோல் குவிக்கும் நிலையில் உடனடியாக அப்புறப்படுத்தாமல் தாமதம் செய்கின்றனர்.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கிறது. அப்பகுதி கடைக்காரர்கள் மட்டுமின்றி, கடைகளுக்கு வந்து செல்லும் மக்களும் பாதிக்கின்றனர்.
சாக்கடையில் இருந்தாலாவது போக்குவரத்து பாதிக்காது; துர்நாற்றமும் வராது. துார்வாரிய கழிவை சாலையில் குவித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதற்கு, கழிவை அகற்றாமலேயே இருக்கலாம் என்றும் அப்பகுதி கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.