தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கனரா வங்கியில் 'பாஸ் புக்' பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் பழுதால் அவதி

கனரா வங்கியில் 'பாஸ் புக்' பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் பழுதால் அவதி

கனரா வங்கியில் 'பாஸ் புக்' பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் பழுதால் அவதி


ADDED : ஜூலை 21, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கனரா வங்கியின் பிரதான கிளை, பழைய பூந்துறை சாலையில் செயல்படுகிறது. இங்கு நுாற்றுக்கணக்கானோர் கணக்கு வைத்-துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பாஸ் புத்த-கத்தில் கணக்கு வழக்குகளை பதிவு செய்ய வச-தியாக, தானியங்கி இயந்திரம் உள்ளது. ஆனால் மூன்று மாதமாக இயந்திரம் பழுதாகியுள்ளது. வங்கி நிர்வாகம் பழுதை நீக்க முயற்சி செய்யா-ததால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களாக பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட முடியவில்லை. இதனால் வங்கி வரவு செலவுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை. இதுகுறித்து வங்கி அதி-காரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. மாவட்-டத்தின் முன்னோடி வங்கியாக வங்கி திகழும் சூழலில், பழுதை சரி செய்யாமல் காலம் தாழ்த்-துவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us