ADDED : ஜூலை 13, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
பவானி:கஞ்சா
விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, சித்தோடு அருகே
கொங்கம்பாளையத்தில், சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை
பிடித்து விசாரிக்கையில், கொங்கம்பாளையம் ஆயப்பாளி ரோடு கோகுல், 19,
என்பது தெரிந்தது. கஞ்சா வியாபாரியான அவரிடம், 400 கிராம் கஞ்சாவை
பறிமுதல் செய்து கைது செய்தனர்.
