ADDED : ஜூலை 13, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
உழவன் நகரை சேர்ந்தவர் ரியாஜூதீன், 38; இவர் மனைவி சபினாபேகம், 38;
ரியாஜூதீனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடும்பத்தினர்
குடிப்பழக்கத்தை விடுமாறு பல முறை தெரிவித்தும் பலனில்லை.
அதேசமயம்
ரியாஜூதீன் இருமுறை தற்கொலைக்கு முயன்று, வீட்டில் இருப்பவர்கள்
காப்பாற்றி அறிவுரை வழங்கினர். இந்நிலையில் குடிபோதையில்
ரியாஜூதீன், எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். ஐந்து நாட்கள் கழித்து
வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவித்த நிலையில், ஈரோடு அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
