ADDED : நவ 20, 2026 03:54 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோட்டில்
இருந்து ஈரோடு செல்லும் சாலையில், சிலர் கஞ்சாவை விற்பனை செய்து
வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சித்தோடு போலீசார், அங்கே
சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து
விசாரிக்கையில், ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணன்,
20. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தட்டான்குட்டையை
சேர்ந்த, நவீன் 19. நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு பகுதியை சேர்ந்த,
17 வயது வாலிபர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்த
சித்தோடு போலீசார், அவர்களிடம் இருந்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.
