தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறை பறவைகளை மீண்டும் சிறைக்குள் தள்ளிய 'கஞ்சா'

சிறை பறவைகளை மீண்டும் சிறைக்குள் தள்ளிய 'கஞ்சா'

சிறை பறவைகளை மீண்டும் சிறைக்குள் தள்ளிய 'கஞ்சா'


ADDED : நவ 24, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மதுவிலக்கு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலக பகுதியில், நேற்று முன்தினம் இரவு சென்றபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில், சிறு, சிறு பொட்டலங்களாக, 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிதது.

விசாரணையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சூர்யா, 29; சேலம் மாவட்டம் மேட்டூர் தின்னப்பட்டியை சேர்ந்த ரமேஷ், 38; என்பது தெரிந்தது.

இருவரும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. விற்பனை செய்ய கஞ்சா வேண்டும் என்று ரமேஷ் கேட்ட நிலையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம், கஞ்சாவை ஈரோட்டுக்கு சூர்யா கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில்தான் இருவரும் போலீசில் சிக்கியுள்ளனர். இருவருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us