ADDED : அக் 25, 2026 07:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, பட்டகாரர் வீதியில் கவிதா என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர்களது வீட்டின் முன்புறம் பலீனோ கார், வேப்பமரத்தின் கீழ் நிறுத்தப்பட்டு இருந்தது.
நேற்று காலை 7:40 மணியளவில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. காரின் மேல்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அறுத்து காரை அப்புறப்படுத்தினர். காருக்குள் யாரும் இல்லாததாலும், மரம் விழுந்த பகுதியில் யாரும் நிற்காததாலும் விபத்து தவிர்க்கப்பட்டது.
