தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காரில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

காரில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

காரில் கஞ்சா கடத்தியவர்கள் கைது


ADDED : ஜூலை 28, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை; பெருந்துறை கோட்டை முனியப்பன் கோவில் அருகில், பெருந்துறை போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த ஒரு காரில் சோதனை செய்ததில், கஞ்சா கடத்தி செல்வது தெரிய வந்தது.

காரில் பெண் உள்பட மூவர் இருந்தனர். விசார-ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 27 வயது பெண், ஈரோடு பழைய பூந்துரை ரோடு பகுதி கோபால், 42; காங்கேயம் நத்தக்காடையூர் முல்-வாடிபாளையம் தீபக், 20, என்பது தெரிய வந்தது. காருடன், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர். பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

* ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவ-லகம் அருகே, கடலுார் குறிஞ்சிபாடி சிவபிர-காசம், 48; கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனசேகர், 31, ஆகியோர் சந்தேகத்துக்கு இடம-ளிக்கும் வகையில் நடமாடினர். அவர்களிடம் ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனை செய்-ததில், 10.5 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.* பர்கூர் போலீஸ் சோதனைச்சாவடியில், பர்கூர் தனிப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டி-ருந்தனர். அப்போது பைக்கில் குட்கா பொருட்க-ளுடன் வந்த, வேலுார் மாவட்டம் காட்பாடி லத்-தேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த அஜித்-குமார், 26, சிக்கினார். பைக்குடன் குட்கா பொருட்-களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தில் மலர்கொடி, 40, என்பவரின் மளிகை கடையில், சித்தோடு போலீசார் சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 100 புகையிலை பாக்-கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

ரயிலில் கிடந்த கஞ்சா

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகு-மரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கமான சோத-னையில் ஈடுபட்டனர். இதில் முன்பதிவில்லாத பெட்டியில் சந்தேகப்படும்படி கிடந்த பையை எடுத்து சோதனை செய்ததில், கஞ்சா பொட்ட-லங்கள் இருந்தன. மொத்தம், 16 கிலோ அளவுக்கு இருந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் பறி-முதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us