sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

/

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 11, 2024 04:22 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, ஜல்லி கிரசர் நிறுவ-னத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்-சியை சேர்ந்த பிரமுகர் உட்பட, ஐந்து பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே பனியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மகேஸ்-வரி, 48, அதே பகுதியில் ஜல்லி கிரசர் நடத்தி வருகிறார். இந்த கிரசர் நிறுவனத்துக்கு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த வி.சி. நிர்-வாகி சுப்பிரமணி மற்றும் அவருடன் வந்தவர்கள் காரில் சென்-றுள்ளனர். அங்கு கிரசரில் இருந்து எந்த வாகனமும் வெளியே வராதபடி, காரை நிறுத்தியதாக தெரிகிறது. மேலும், அந்நிறுவ-னத்தில் இருந்த பெண் ஊழியரிடம் சுப்பிரமணி மற்றும் அவ-ருடன் சென்றவர்கள், குவாரிக்கு லைசன்ஸ் உள்ளதா, அதை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அந்த பெண் ஊழியரிடம் இவர்கள் பணம் கேட்டதுடன், தொழில் செய்ய முடி-யாமல் தடை ஏற்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்-ததாக தெரிகிறது.

இதையடுத்து, கிரசர் உரிமையாளர் மகேஸ்வரி, ஐந்து பேர் மீது கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பணியாளரிடம், பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us