ADDED : ஆக 21, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை
அடுத்த பொன்முடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி, 50; இவரின் மருமகன்
ஜெயசந்திரன். மாமியார் வீட்டுக்கு வந்த நிலையில், ஜெயசந்திரனுக்கு
மொபைல்போனில் அழைப்பு வந்தது. டவர் கிடைக்காததால் எருக்காட்டு
தோட்டம் அருகில் சென்று பேசியுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த
விஸ்வநாதன், ஜெயசந்திரனை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஜானகி, தன்
கணவர் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விஜயமங்கலம் சென்றார்.
அப்போது வழிமறித்த விஸ்வநாதன், அவர்களின் ஜாதி பெயரை இழிவாக பேசி,
கத்தியை காட்டி மிரட்டினாராம். ஜானகி புகாரின்படி பெருந்துறை
போலீசார், விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
