ADDED : ஆக 21, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:டி.என்.பாளையத்தை அடுத்த பெருமுகை எரங்காட்டூரை சேர்ந்த சென்னிமலை மகன் நவீன்ஸ்ரீ, 20; வழிப்பறி வழக்கில் பங்களாபுதுார் போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதால், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., மூலம் ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், நவீன்ஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
