/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை
/
காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை
ADDED : அக் 29, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி விழிப்புணர்வு
துலா தீர்த்த யாத்திரை
ஈரோடு, அக். 29-
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினர், ஈரோட்டுக்கு நேற்று வந்தனர். இவர்கள், 14ம் ஆண்டாக காவிரி நதி நீரை வைத்து பூஜை செய்து வணங்கினர். முன்னதாக கடந்த, 20ல் காவிரி உற்பத்தியாகும் குடகில் இருந்து யாத்திரையை
தொடங்கினர்.
நவ.13ல் பூம்புகார் சென்று பூஜை செய்வர். குழுவில் ராமநாத சுவாமிகள், ஆதித்ய ஆனந்த சரஸ்வதி உள்ளிட்ட, 18 பேர் இடம் பெற்றுள்ளனர். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், பூக்களை துாவி வழிபாடு நடத்தினர். பின் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு கிளம்பி சென்றனர்.