டூவீலர் சைலன்சரில் மாற்றம் செய்து கூடுதல் ஒலி எழுப்புவதால் பாதிப்பு
டூவீலர் சைலன்சரில் மாற்றம் செய்து கூடுதல் ஒலி எழுப்புவதால் பாதிப்பு
ADDED : நவ 01, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியில்
வாலிபர்கள் சிலர், தங்கள் பைக்கில் உள்ள சைலன்சர்களை கழற்றி விட்டு,
அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர்களை பொருத்துகின்றனர். இந்த
பைக்குகளில், சாலையில் வலம் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக,இரவு நேரங்களில் வாலிபர்கள் குடியிருப்பு பகுதியில்
டூவீலரில் கூடுதல் சத்தத்துடன் செல்லும்போது, பொதுமக்கள் மற்றும்
படிக்கும் மாணவ, மாணவியர் கவனம் சிதறுவதால், பாதிப்புக்கு ஆளாகி
வருகின்றனர். அதிக சத்தத்துடன் பைக்கில் வலம் வரும் வாகனங்களை
பறிமுதல் செய்ய வேண்டும் என, புன்செய்புளியம்பட்டி போலீசாரிடம்,
அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
