/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
ADDED : அக் 13, 2024 08:39 AM
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி மாத பிரமோற்சவ தேர்த்திரு-விழா கடந்த, ௫ம் தேதி இரவு தொடங்கியது. இதை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் இரவு அரங்கநாதருக்கு கல்யாண உற்சவம், மலர் பல்-லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று
காலை நடந்தது. கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கஸ்தூரி அரங்கநாதர்
எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ப.செ.பார்க் சந்திப்பு, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக
சென்று, பெரியமாரியம்மன் கோவில், காமராஜர் வீதி வழியே கோவிலில் நிலை சேர்ந்தது.இன்று காலை பெருமாள் குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்ல உள்ளார். நாளை மாலை
தெப்போற்சவம், 15ம் தேதி காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், அன்றி-ரவு
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.