தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாரியூர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பாரியூர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பாரியூர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஜன 10, 2026 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 08:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா நேற்று முன்-தினம் நடந்தது. இதில், 20 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்-திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று ஏராளமான பக்-தர்கள், அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், மிளகு, மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த உப்பு துாவி வழிபட்டனர்.

இதையடுத்து திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சிக்காக, விநாயகர் மற்றும் அம்மன் தேர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் ராஜகோபுரம் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. ஈரோடு தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் அடங்கிய குழுவினர் மாலை, 4:00 மணிக்கு, முதலில் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின் அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இருதேர்களும் பாரியூர் கோவில் பஸ் நிறுத்தம் வழியாக, ஆதிநாராயண பெருமாள் கோவிலை கடந்து, அமரபணீஸ்வரர் கோவிலை அடைந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us