/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
/
ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED : நவ 15, 2024 01:59 AM
சென்னிமலை, நவ. 15-
சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு தேர்திருவிழாவில் கடந்த, 7ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. அதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தினமும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். தலவுமலை மற்றும் வடுகபாளையம் பகுதி பக்தர்கள், காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.
செவ்வாய் இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அம்மன்கோவில்புதுார், வாய்கால்மேடு மக்கள் வழிபாடு நடந்தினர். நேற்று முன்தினம் காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. அதை தொடந்து கொமாரபாளையம், பனங்காட்டுபுதுார் மக்கள் வழிபட்டனர். அதன்பின்பு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினர். நேற்று காலை, 8:10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் குழந்தைகள் சேத்துமுட்டி வேஷமிட்டு காணிக்கை செலுத்தினர். மாலையில் தேர் நிலை சேர்ந்தது. இரவில் மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.