/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனிம வளத்தை சுரண்டும் சென்னிமலை குவாரிகள் கோட்ட வேளாண் கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
கனிம வளத்தை சுரண்டும் சென்னிமலை குவாரிகள் கோட்ட வேளாண் கூட்டத்தில் குற்றச்சாட்டு
கனிம வளத்தை சுரண்டும் சென்னிமலை குவாரிகள் கோட்ட வேளாண் கூட்டத்தில் குற்றச்சாட்டு
கனிம வளத்தை சுரண்டும் சென்னிமலை குவாரிகள் கோட்ட வேளாண் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : நவ 23, 2024 01:33 AM
கனிம வளத்தை சுரண்டும் சென்னிமலை குவாரிகள்
கோட்ட வேளாண் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஈரோடு, நவ. 23-
ஈரோட்டில், வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு, முறையாக பதில் தருவதில்லை. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பாதையை, வனத்துறை உட்பட பிற துறை அனுமதி பெறாமல், சேதப்படுத்தி சாலை அமைக்கின்றனர். சென்னிமலை பகுதியில் உள்ள பல்வேறு குவாரிகள் அனுமதி பெறாமலும், அனுமதி வழங்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிம வளத்தை அகற்றி உள்ளனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு: மொடக்குறிச்சி பகுதியில், பவர் கிரிட் மூலம் டவர் லைன் அமைத்ததற்கு, மரம் உள்ளிட்ட சேதாரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும். கொடுமுடி தாலுகா அலுவலகத்தை முறையாக அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சென்னிமலையை தனி தாலுகாவாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். அனைத்து வி.ஏ.ஓ.,க்களும் காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணி செய்ய வேண்டும்.
ஆர்.டி.ஓ., ரவி: சென்னிமலையை தனி தாலுகாவாக அறிவிப்பதற்கான திட்ட வரைவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அரசு விரைவில் அறிவிக்கும். பிற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பதில்கள் அனுப்பி வைக்கப்படும், என்றார். கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

