/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை; பாதுகாப்பு பணியில் 2,480 போலீசார்
/
முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை; பாதுகாப்பு பணியில் 2,480 போலீசார்
முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை; பாதுகாப்பு பணியில் 2,480 போலீசார்
முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகை; பாதுகாப்பு பணியில் 2,480 போலீசார்
ADDED : டிச 18, 2024 07:15 AM

ஈரோடு: ஈரோட்டிற்கு, தமிழக முதல்வர் நாளை வருகை தர உள்ளதையொட்டி, ஈரோடு உட்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 2,480 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் நிகழ்ச்சியாக, ஈரோடு மாவட்டத்திற்கு நாளை வருகிறார். அன்றைய தினம் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். காலிங்கராயன் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். 20 காலை, 10:00 மணிக்கு சோலார் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்கும், அரசு விழாவில் பங்கேற்கிறார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கியும் வைக்கிறார். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, எட்டு மாவட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது: நாளை ஈரோடுக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 980 போலீசார் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
பாதுகாப்பு பணிக்கு மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், டி.ஐ.ஜி., சரவணசுந்தர், ஈரோடு எஸ்.பி., ஜவகர் ஆகியோர் மேற்பார்வையில், ஏழு மாவட்ட எஸ்.பி.,க்கள், ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கூறினர்.