தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குழந்தை உதவி மையத்தில் பணி விண்ணப்பம் வரவேற்பு

குழந்தை உதவி மையத்தில் பணி விண்ணப்பம் வரவேற்பு

குழந்தை உதவி மையத்தில் பணி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : நவ 07, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு மாவட்ட குழந்தைகள் அலகின் கீழ் செயல்படும், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் குழந்தை உதவி மையத்தில் வழக்கு பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தொகுப்பூதியமாக மாதம், 18,000 ரூபாய் வழங்கப்படும். 42 வயதுக்கு உட்பட்ட பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்ட, பணி அனுபவம் மிக்க, அரசு உதவி மையங்களில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

erode.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து வரும், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் - 6 வது தளம், ஈரோடு - 11' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us