ADDED : மே 07, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே பாரியூர் அமர பணீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, மே., 10ல், இரவு வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது.
வரும் 11 காலை அபிேஷகம், திருக்கொடியேற்றம், சுவாமி புறப்பாடு, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 5:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் நடக்கிறது. 12 மாலை 5:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 13 காலை 9:00 மணிக்கு நடராஜர் திருவீதி உலா, மஞ்சள் நீர் உற்சவம் என நடக்கிறது.