/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு
/
கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு
ADDED : நவ 03, 2024 01:33 AM
ஈரோடு, நவ. 3-
கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நவ.,2ம் தேதி, கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர்.
இதன்படி ஈரோட்டில், சத்தி சாலை சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில், கிறிஸ்தவர்கள் பூக்களால் அலங்கரித்தும், மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், ஜெப புத்தகம் வாசித்தும், முன்னோர் ஆத்மா சாந்தியடைய நேற்று பிரார்த்தனை செய்தனர். மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கல்லறை திருநாளையொட்டி ஈரோடு கல்லறை தோட்டத்தின் முன், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஊதுவத்தி, மெழுகுவர்த்தி, பூக்கள் விற்பனை செய்யப்பட்டன.
* சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வடவள்ளி, சிக்கரசம்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டத்தில், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலைகளால் அலங்கரித்தும் அஞ்சலி செலுத்தினர்.