ADDED : அக் 02, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: சிவில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், உலக ஓய்வூதியர் மற்றும் முதியோர் தின நிகழ்ச்சி, ஆர்ப்-பாட்டம் ஈரோட்டில் நடந்தது.
மாவட்ட செயலர் சின்னசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமசாமி, பன்னீர்செல்வம், ஸ்ரீதரன், திருநாவுக்கரசு, முருகேசன், ராஜன் உட்பட பலர் பேசினர்.கண்ணியமான வாழ்க்கைக்கான பென்ஷன் வழங்க வேண்டும். தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு உரிய வீடு, பாதுகாப்பான வசதி செய்து தர வேண்டும்.
எட்டாவது ஊதியக்குழு விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். 'வேலிடேஷன் ஆப் பென்ஷன் ரூல்ஸ்-2025'ஐ ரத்து செய்ய வேண்டும். 65, 70, 76 வயதுகளில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க
வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும், என்-பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர். கன்வீனர் பரமசிவம் நன்றி கூறினார்.
