குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750' சத்துணவு ஓய்வூதியர் வலியுறுத்தல்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750' சத்துணவு ஓய்வூதியர் வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஈரோட்டில்
நடந்தது.
அந்தோணிசாமி வரவேற்றார். ஒன்றிய தலைவர் அருள்மா-ணிக்கம், ரவிதாஸ், வெங்கிடு, பழனிசாமி, சாமிகுணம் உட்பட பலர் பேசினர்.
அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், 6,750 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீடு என்.எச்.ஐ.எஸ்., திட்டத்தில் தங்க-ளையும் இணைத்திட வேண்டும்.
பதவி உயர்வில் சென்றவர்களுக்கும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறை-வேற்றினர். மாவட்ட பொருளாளர் சித்ராதேவி நன்றி
கூறினார்.
